இடுகைகள்

*🔊தனிமை உறவாடும் பொய்யானவள்,*

🍂மாற்றங்களை மாற்ற எண்ணுகிறேன் ஏமாளியாக்கப்படுகிறேன்.. 🍂சரி,ஏமாற்றங்களை கடக்க கொள்கிறேன், பரீட்சை முடிவில் தோல்வி அடைகிறேன்.. 🍂கோபத்தை மூட்டை கட்ட முயல்கிறேன் உடல் ஏனோ டக்கென கொதிக்கிறது.. 🍂மௌனத்தில் சிறை வைக்க எண்ணுகிறேன், வாய் ஏனோ வாக்கு வாதத்தில் முடிகிறது.. 🍂அன்பை அளவில்லாமல் அல்லி கொடுக்கிறேன், தொகட்டியது போலும் தூக்கி எறியப்படுகிறது.... 🍂மடிசாய்ந்து மணிக்காய் நிகழும் உரையாடல் ஏனோ நொடிப்பொழுதில் நொருக்கி கொள்கிறது அவர் அவர் மனதை... 🍂எப்போதும் அம்மடி அப்படியே தலை சாய காத்து கிடக்கும், தெகட்ட தெகட்ட பேச்சுவார்த்தை எப்போது நிகழும் என்ற ஏக்கத்தோடு.. *🔊தனிமை உறவாடும் பொய்யானவள்,*   -  Writer Dirince 

தனிமை உறவாடும் பொய்யானவள்

🍂மாற்றங்களை மாற்ற எண்ணுகிறேன் ஏமாளியாக்கப்படுகிறேன்.. 🍂சரி,ஏமாற்றங்களை கடக்க கொள்கிறேன், பரீட்சை முடிவில் தோல்வி அடைகிறேன்.. 🍂கோபத்தை மூட்டை கட்ட முயல்கிறேன் உடல் ஏனோ டக்கென கொதிக்கிறது.. 🍂மௌனத்தில் சிறை வைக்க எண்ணுகிறேன், வாய் ஏனோ வாக்கு வாதத்தில் முடிகிறது.. 🍂அன்பை அளவில்லாமல் அல்லி கொடுக்கிறேன், தொகட்டியது போலும் தூக்கி எறியப்படுகிறது.... 🍂மடிசாய்ந்து மணிக்காய் நிகழும் உரையாடல் ஏனோ நொடிப்பொழுதில் நொருக்கி கொள்கிறது அவர் அவர் மனதை... 🍂எப்போதும் அம்மடி அப்படியே தலை சாய காத்து கிடக்கும், தெகட்ட தெகட்ட பேச்சுவார்த்தை எப்போது நிகழும் என்ற ஏக்கத்தோடு..    -  Writer Dirince 

வாத்தியார்

"அ" கற்றுத் தந்தது உறவுகள் என்றாலும் அருச்சுவடியில் ஞானம் பெற்றுத்தந்தது உபாத்தியாயர் நீர் தானே! செங்கோல் ஏந்திய கோவிலைப் போல் மூங்கில் தாங்கிய கையினை உடையவர் சூதானமாக சூத்திரம் தீர்ப்பவர் அக்கறை வழி வரும் ஆத்திரக்காரர் மூவேளையின் உணவினைப்போல் அறிவினை ஊட்ட வல்லவர் இவரால் சூட்டப்படும் என்றும் அறிவுத்தார் அதனை சூட்டி விடுபவரே "வாத்தியார்"   -  Writer புகழன் 

வைத்தியர்கள்

அன்று காட்டு வழி சென்றால் பல மூலிகைக் கன்று. நோயொன்று வந்தால் அன்று நோகாமல் நோய் தீர்ப்பர் மூலிகை தந்து. ஓடும் இயந்திரத்திலின்று பழுது பார்ப்பவர் என்று பெருமைக்குரிய பெயர் ஒன்று வைத்தியர்கள் இன்று பெற்றிருப்பதுண்டு. கைபேசியில் மின்கலம் மாற்றுவது போலே காதலின் உணர்வு கொண்ட இதயத்தைக் கையாலே மாற்றும் வல்லமை கொண்டோனே. கடவுளின் உறவினைப் பெற்றோனே. உயிர்களைத் தாக்கும் நோக்கில் கத்தியேந்தும் கரங்களிடையே உயிர்களைக் காக்கும் நோக்கில் கத்தியேந்தும் கரங்களுடைய தாம் எமனுடன் போர் புரியும் படையோ இறப்பினை நோக்கி நகரும் ஒவ்வொருவருடைய பாதையில் நிற்கும் மிகப்பெரும் தடையோ. குழந்தைகளைத் தாய்க்கும் முதலேந்தும் பாக்கியம் பெற்றோர்கள். கோவிலில்லா கடவுளர்கள். உடல் முழுக்க அறிந்தோர்கள். அவர்கள் தான் உயிர்களைக் காக்கும் வைத்தியர்கள்.   -  Writer புகழன் 

பிறப்பு வாழ்வு இறப்பு

பிறப்பு என்பது            இறைவனின் அழகான படைப்பு               ஏனெனில் அம்மாவின் கருவறையில் வாழ்க்கை என்பது               இறைவனின் அழகான வரம்              ஏனெனில் என் கையில் இறப்பு என்பது             இறைவனின் அழகான அழைப்பு                 ஏனெனில் சுதந்திர மரணம்   -  Writer Tharneethan 

அன்பு

அன்பெனும் இனிய தூறலில் நனைய ஆவல் கொள்ளும் மனம்  அதில் மூழ்க மறுப்பது ஏனோ? ___இனிய காலை வணக்கம் தோழர்களே____   -  Writer Sent from vivo smartphone

காதல்

இருளின் இன்பத்தை இலகுவாய் உணர்த்தியவன் உயிருக்குள் உயிராய் வந்து உறவாடுபவன் புன்னகையால் எனை சிறைப் பிடித்தவன் நான் பிறந்த காரணத்தை முழுமையடையச் செய்தவன் அவன் எனக்குள் வாழும் என்னவன்...   -  கவி(dhanu)