இடுகைகள்

🌲🌲எங்கே அந்த உலகத்தின் மீட்பர்🌲🌲

 மார்கழி மாத காற்றில் வெண்பனி தூவும் காலம் வானெங்கும் பனிமலை காற்று வீசிடும். நள்ளிரவில் ஒரு ஓரத்தில் மழலையின் குரல் எங்கென கண்களில் அங்குமிங்கும் தேடிட. பெத்தலகேம் நகர் கோலாகலமாக சஞ்சரிக்க மாடமாளிகை எல்லாம் தேடினோம் அந்த குரலை. இறுதியில் தோற்றவர்களாய் ஒய்ந்தோம் ஒரு இடத்தில்.   கீழ்த்தேசம் நின்று உலகின் ஒளியை காண வானில் வழிகாட்டி விண்மீன் ஒன்று. ஆறு கடல்கள் மேடு பள்ளங்கள் மலைக்குன்றுகள் காடுகள் தாண்டி எம்மை அழைத்து வந்ததுவே. ஏரோது மன்னன் அரண்மனை கண்டதும் மாயமாய் மறைந்தது என்னவோ. என்ன செய்வோம் நாம் என்ன செய்வோம் இறைவா முறையிட்டோம் அவரிடம்.   அதோ பார் அதே விண்மீன் மீண்டும் வழிகாட்டியாய் மனதில் புன்னகை விழிகளில் ஆனந்த கண்ணீர் சென்றோம் விண்மீனைத் தொடர்ந்து அதோ ஒரு மாடடைக்குடில் விண்மீன் நின்றது குடிலின் மேல் சிலை போல். உலகத்தின் அரசர் மாடடை குடிலிலா என்ன ஆச்சரியம் என்ன ஆச்சரியம். உள் நுழைந்தோம் கண்டோம் உலகத்தின் அழகு ஒரு வைக்கோல் படுக்கையில். கொட்டிக் கிடந்தது ஒரு ஆண் மகவாய் தந்தை தாய் சூழ பிரபஞ்சத்தின் படைப்புகள் யாவும் வணங்கி நிற்க தெண்டனிட்டு விழுந்தோம் எம்மை சரணாக்க கையில் காணிக்கையாய்...

வாழ்க்கை உங்களுடையது தவற விடாதீர்கள்

_🍂தவறிப் போனதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் அது திரும்ப வராது.._ _🍂பிறருடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் அது பயனளிக்காது..._ _🍂எல்லா மனிதர்களையும் திருப்திப்படுத்த நினைக்காதீர்கள் அது நடக்காது..._            ┈┉┅┅━✿• ✮ •✿━┅┅┉┈   -  Writer Dirince 

*🔏வாழ்க்கை பயணம்..*

✨வாழ்க்கை எனும் பயணத்தில் ஜன்னல் இருக்கை எதிர்பார்ப்பது தவறு இல்லை ஆனால், ஜன்னல் இருக்கை கிடைத்தால் தான் இயற்கையை ரசிக்க முடியும் என் நினைப்பது தான் தவறு...!! ┈┉┅┅━✿• ✮ •✿━┅┅┉┈   -  Writer Dirince 

*🔊தனிமை உறவாடும் பொய்யானவள்,*

🍂மாற்றங்களை மாற்ற எண்ணுகிறேன் ஏமாளியாக்கப்படுகிறேன்.. 🍂சரி,ஏமாற்றங்களை கடக்க கொள்கிறேன், பரீட்சை முடிவில் தோல்வி அடைகிறேன்.. 🍂கோபத்தை மூட்டை கட்ட முயல்கிறேன் உடல் ஏனோ டக்கென கொதிக்கிறது.. 🍂மௌனத்தில் சிறை வைக்க எண்ணுகிறேன், வாய் ஏனோ வாக்கு வாதத்தில் முடிகிறது.. 🍂அன்பை அளவில்லாமல் அல்லி கொடுக்கிறேன், தொகட்டியது போலும் தூக்கி எறியப்படுகிறது.... 🍂மடிசாய்ந்து மணிக்காய் நிகழும் உரையாடல் ஏனோ நொடிப்பொழுதில் நொருக்கி கொள்கிறது அவர் அவர் மனதை... 🍂எப்போதும் அம்மடி அப்படியே தலை சாய காத்து கிடக்கும், தெகட்ட தெகட்ட பேச்சுவார்த்தை எப்போது நிகழும் என்ற ஏக்கத்தோடு.. *🔊தனிமை உறவாடும் பொய்யானவள்,*   -  Writer Dirince 

தனிமை உறவாடும் பொய்யானவள்

🍂மாற்றங்களை மாற்ற எண்ணுகிறேன் ஏமாளியாக்கப்படுகிறேன்.. 🍂சரி,ஏமாற்றங்களை கடக்க கொள்கிறேன், பரீட்சை முடிவில் தோல்வி அடைகிறேன்.. 🍂கோபத்தை மூட்டை கட்ட முயல்கிறேன் உடல் ஏனோ டக்கென கொதிக்கிறது.. 🍂மௌனத்தில் சிறை வைக்க எண்ணுகிறேன், வாய் ஏனோ வாக்கு வாதத்தில் முடிகிறது.. 🍂அன்பை அளவில்லாமல் அல்லி கொடுக்கிறேன், தொகட்டியது போலும் தூக்கி எறியப்படுகிறது.... 🍂மடிசாய்ந்து மணிக்காய் நிகழும் உரையாடல் ஏனோ நொடிப்பொழுதில் நொருக்கி கொள்கிறது அவர் அவர் மனதை... 🍂எப்போதும் அம்மடி அப்படியே தலை சாய காத்து கிடக்கும், தெகட்ட தெகட்ட பேச்சுவார்த்தை எப்போது நிகழும் என்ற ஏக்கத்தோடு..    -  Writer Dirince 

வாத்தியார்

"அ" கற்றுத் தந்தது உறவுகள் என்றாலும் அருச்சுவடியில் ஞானம் பெற்றுத்தந்தது உபாத்தியாயர் நீர் தானே! செங்கோல் ஏந்திய கோவிலைப் போல் மூங்கில் தாங்கிய கையினை உடையவர் சூதானமாக சூத்திரம் தீர்ப்பவர் அக்கறை வழி வரும் ஆத்திரக்காரர் மூவேளையின் உணவினைப்போல் அறிவினை ஊட்ட வல்லவர் இவரால் சூட்டப்படும் என்றும் அறிவுத்தார் அதனை சூட்டி விடுபவரே "வாத்தியார்"   -  Writer புகழன் 

வைத்தியர்கள்

அன்று காட்டு வழி சென்றால் பல மூலிகைக் கன்று. நோயொன்று வந்தால் அன்று நோகாமல் நோய் தீர்ப்பர் மூலிகை தந்து. ஓடும் இயந்திரத்திலின்று பழுது பார்ப்பவர் என்று பெருமைக்குரிய பெயர் ஒன்று வைத்தியர்கள் இன்று பெற்றிருப்பதுண்டு. கைபேசியில் மின்கலம் மாற்றுவது போலே காதலின் உணர்வு கொண்ட இதயத்தைக் கையாலே மாற்றும் வல்லமை கொண்டோனே. கடவுளின் உறவினைப் பெற்றோனே. உயிர்களைத் தாக்கும் நோக்கில் கத்தியேந்தும் கரங்களிடையே உயிர்களைக் காக்கும் நோக்கில் கத்தியேந்தும் கரங்களுடைய தாம் எமனுடன் போர் புரியும் படையோ இறப்பினை நோக்கி நகரும் ஒவ்வொருவருடைய பாதையில் நிற்கும் மிகப்பெரும் தடையோ. குழந்தைகளைத் தாய்க்கும் முதலேந்தும் பாக்கியம் பெற்றோர்கள். கோவிலில்லா கடவுளர்கள். உடல் முழுக்க அறிந்தோர்கள். அவர்கள் தான் உயிர்களைக் காக்கும் வைத்தியர்கள்.   -  Writer புகழன்