வைத்தியர்கள்

அன்று காட்டு வழி சென்றால் பல மூலிகைக் கன்று.
நோயொன்று வந்தால் அன்று
நோகாமல் நோய் தீர்ப்பர் மூலிகை தந்து.

ஓடும் இயந்திரத்திலின்று பழுது பார்ப்பவர் என்று
பெருமைக்குரிய பெயர் ஒன்று
வைத்தியர்கள் இன்று பெற்றிருப்பதுண்டு.

கைபேசியில் மின்கலம் மாற்றுவது போலே
காதலின் உணர்வு கொண்ட இதயத்தைக் கையாலே
மாற்றும் வல்லமை கொண்டோனே.
கடவுளின் உறவினைப் பெற்றோனே.

உயிர்களைத் தாக்கும் நோக்கில் கத்தியேந்தும் கரங்களிடையே
உயிர்களைக் காக்கும் நோக்கில் கத்தியேந்தும் கரங்களுடைய தாம்
எமனுடன் போர் புரியும் படையோ
இறப்பினை நோக்கி நகரும் ஒவ்வொருவருடைய பாதையில் நிற்கும் மிகப்பெரும் தடையோ.

குழந்தைகளைத் தாய்க்கும் முதலேந்தும் பாக்கியம் பெற்றோர்கள்.
கோவிலில்லா கடவுளர்கள்.
உடல் முழுக்க அறிந்தோர்கள்.
அவர்கள் தான் உயிர்களைக் காக்கும் வைத்தியர்கள்.   -  Writer புகழன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விடியல் மங்கை

வாத்தியார்

*🔏வாழ்க்கை பயணம்..*