இடுகைகள்

பிறப்பு வாழ்வு இறப்பு

பிறப்பு என்பது            இறைவனின் அழகான படைப்பு               ஏனெனில் அம்மாவின் கருவறையில் வாழ்க்கை என்பது               இறைவனின் அழகான வரம்              ஏனெனில் என் கையில் இறப்பு என்பது             இறைவனின் அழகான அழைப்பு                 ஏனெனில் சுதந்திர மரணம்   -  Writer Tharneethan 

அன்பு

அன்பெனும் இனிய தூறலில் நனைய ஆவல் கொள்ளும் மனம்  அதில் மூழ்க மறுப்பது ஏனோ? ___இனிய காலை வணக்கம் தோழர்களே____   -  Writer Sent from vivo smartphone

காதல்

இருளின் இன்பத்தை இலகுவாய் உணர்த்தியவன் உயிருக்குள் உயிராய் வந்து உறவாடுபவன் புன்னகையால் எனை சிறைப் பிடித்தவன் நான் பிறந்த காரணத்தை முழுமையடையச் செய்தவன் அவன் எனக்குள் வாழும் என்னவன்...   -  கவி(dhanu)

விடியல் மங்கை

கவி கற்பனையில் விடியலை யான் பெண் ஆக்கி கொண்டேன் குயில்கள் பாட்டிசைக்க அருவிகள் இசை மீட்க பட்சிகள் யாவும் பிற்பாட பூக்களாய் வண்ணத்துப்பூச்சிகள் தூவ பொன்னிற சேலை மாற்றி அவள் தோன்றினாள் அவள் என் கண்களை கவர்ந்தீர்த்து கொண்டாள். அவள் அழகில் யான் என்றும் இரசிகனே.____இனிய காலை வணக்கம் _______ Sent from vivo smartphone

நிதம் ஒரு கவி

விடியல் இரசனையில் நித்தம் ஒரு கவி எழுத தொடங்கினேன். கற்பனை கூட தோற்று போகிறது விடியலின் அழகில் _________காலை வணக்கம்________ Sent from vivo smartphone

விடியலில் மயக்கம்

நித்தம் ஒரு கானாவுடன் விழித்தெழும் என் விழிகள் உடன் தேடி செல்வது பல வர்ண பூக்களையே மறு புறம் காதுகள் பட்சிகளின் பாடலில் மயங்க தேன் குடித்த  தேனீயின் 🐝    குதூகலம்  பார்த்து நாவூறியது இவை கண்டு திகைத்து நான் விட்ட பெரு மூச்சிலே பூக்களின் நறுமணம் மூக்கை துளைத்தது இவ்வாறாக புலன் ஐந்தும் வெவ்வேறு திசை நோக்க விடியலின் இன்பத்தில் நெஞ்சம் மயங்கி நின்றேன -இனிய காலை    வணக்கம் - Sent from vivo smartphone

விடியல் மழை பொழுது

மழையோடு சேர்ந்த ஈரத் தென்றலில் வதனம் நனைக்கவே இன்று கண்விழித்தேன் யானுடன் தாங்களும் விடியலின் ஈரத் தென்றலில் மனம் குளிர வாழ்த்துகிறேன் இனிய காலை வணக்கம்💚🌧️💧💧☔☔☔💧💧💧💦💦💦🤍💙💜 Sent from vivo smartphone