இருளின் இன்பத்தை இலகுவாய் உணர்த்தியவன் உயிருக்குள் உயிராய் வந்து உறவாடுபவன் புன்னகையால் எனை சிறைப் பிடித்தவன் நான் பிறந்த காரணத்தை முழுமையடையச் செய்தவன் அவன் எனக்குள் வாழும் என்னவன்... - கவி(dhanu)
கவி கற்பனையில் விடியலை யான் பெண் ஆக்கி கொண்டேன் குயில்கள் பாட்டிசைக்க அருவிகள் இசை மீட்க பட்சிகள் யாவும் பிற்பாட பூக்களாய் வண்ணத்துப்பூச்சிகள் தூவ பொன்னிற சேலை மாற்றி அவள் தோன்றினாள் அவள் என் கண்களை கவர்ந்தீர்த்து கொண்டாள். அவள் அழகில் யான் என்றும் இரசிகனே.____இனிய காலை வணக்கம் _______ Sent from vivo smartphone
நித்தம் ஒரு கானாவுடன் விழித்தெழும் என் விழிகள் உடன் தேடி செல்வது பல வர்ண பூக்களையே மறு புறம் காதுகள் பட்சிகளின் பாடலில் மயங்க தேன் குடித்த தேனீயின் 🐝 குதூகலம் பார்த்து நாவூறியது இவை கண்டு திகைத்து நான் விட்ட பெரு மூச்சிலே பூக்களின் நறுமணம் மூக்கை துளைத்தது இவ்வாறாக புலன் ஐந்தும் வெவ்வேறு திசை நோக்க விடியலின் இன்பத்தில் நெஞ்சம் மயங்கி நின்றேன -இனிய காலை வணக்கம் - Sent from vivo smartphone
மழையோடு சேர்ந்த ஈரத் தென்றலில் வதனம் நனைக்கவே இன்று கண்விழித்தேன் யானுடன் தாங்களும் விடியலின் ஈரத் தென்றலில் மனம் குளிர வாழ்த்துகிறேன் இனிய காலை வணக்கம்💚🌧️💧💧☔☔☔💧💧💧💦💦💦🤍💙💜 Sent from vivo smartphone
குமரி தேசத்தில் தோன்றியதே முதல் குடி குமரி தேசத்தின் மூத்த குடி நாகர் குடி அந் நாகர் குடி நாவிலிருந்து வந்ததடி தமிழ் மொழி. புலிக்கொடி என்றும் சோழர் கொடி கருநாகக் கொடியே எங்கள் நாகர் கொடி நாகர் குடியே இராவணன் ஆண்ட குடி கரு நாகக் கொடியே இராவணன் நாட்டிய கொடி. போர் யுக்தி முற்றுமறிந்த குடி பார் முழுதும் தன் தேசம் என்று வாழ்ந்த குடி நேர் பாதை போர் புரிய கொண்ட குடி வேர் போல் படர்ந்திருந்த குடி. சிவ பக்தியில் சிகரம் தொட்ட குடி தவ சித்தியால் சிவ வரம் பெற்ற குடி. இராவணனின் கீழ் பொற்காலம் கண்ட குடி மூவேளையும் வயிரு ஆற அறு சுவையில் உண்ட குடி. நாங்கள் என்றும் வீழ்த்தப் படுவது வாள்களால் அல்ல தாங்கள் புரியும் துரோகங்களால் மட்டுமே.