நாகர் குடியில் பிறந்தேன்

குமரி தேசத்தில் தோன்றியதே முதல் குடி குமரி தேசத்தின் மூத்த குடி நாகர் குடி அந் நாகர் குடி நாவிலிருந்து வந்ததடி தமிழ் மொழி.

புலிக்கொடி என்றும் சோழர் கொடி கருநாகக் கொடியே எங்கள் நாகர் கொடி நாகர் குடியே இராவணன் ஆண்ட குடி கரு நாகக் கொடியே இராவணன் நாட்டிய கொடி.

போர் யுக்தி முற்றுமறிந்த குடி பார் முழுதும் தன் தேசம் என்று வாழ்ந்த குடி நேர் பாதை போர் புரிய கொண்ட குடி வேர் போல் படர்ந்திருந்த குடி.

சிவ பக்தியில் சிகரம் தொட்ட குடி தவ சித்தியால் சிவ வரம் பெற்ற குடி. இராவணனின் கீழ் பொற்காலம் கண்ட குடி மூவேளையும் வயிரு ஆற அறு சுவையில் உண்ட குடி.

நாங்கள் என்றும் வீழ்த்தப் படுவது வாள்களால் அல்ல தாங்கள் புரியும் துரோகங்களால் மட்டுமே. 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விடியல் மங்கை

வாத்தியார்

*🔏வாழ்க்கை பயணம்..*