அன்பெனும் தந்திரம்

         
          கல் ஒன்று தடக்கி யாரோ ஒருவன் விழுகையில் தன்னையறியாது கரம் ஒன்று நீளுதல் அன்பெனும் தந்திரம்.
           கண்ணருகில் யாரோ ஒருவன் முகம் வாடி பசி என்று கையேந்தும் போது மனமுருகி கரங்கள் தரும் அன்னம் அன்பெனும் தந்திரம்.
            மனமுடைந்து கனவுடைந்து யாரோ ஒருவன் மதியிழந்து தெருவில் இருக்கையில் நாவு கூறும் உட்சாக வார்த்தைகள் அன்பெனும் தந்திரம்.
           மனம் சொல்லும் வழியிலே தடம் தவறி போனாலும் யாரிவரென்றியா மூத்தோன் சொல்லும் அறிவுரையில் காதுகள் உறைத்து தடம் மாற்றி செல்லல் அன்பெனும் தந்திரம்
           பொள்ளுடன் எடுத்து வைத்த காலும் நடுங்க  பேருந்து தொடக்கையில் தவறி விழ போகையிலே நெஞ்சொன்று பதறி கால்கள் நகர்ந்து இடமளித்தல் அன்பெனும் தந்திரம் .
          சபை நடுவே  யாரோ ஒருவன் சபை கூறும் இகழுரையிலே தலை குனிந்து உடல் கூனி  நிற்கையில் பார்த்ததிரு விழிகளில் நிறையும் நீரும் அன்பெனும் தந்திரம்.

          உயிர் தந்த தாயினிடத்தும் அறிவூட்டும் தந்தையினிடத்தும் உயிர் பாதி கொண்ட துணையினிடத்தும் சோகத்தில் பங்கெடுக்கும் சொந்தத்திடத்தும்  கவலை மறக்கும் நட்பிடத்தும் கொள்ளும் அன்பு மட்டுமா அன்பு?
           யாரென்று அறியாதான் படும் துயரிலே மனம் உருகி போதலும் அன்பே !
         மனத்தோடு ஒட்டி உறவாடுவது மட்டுமா அன்பு கண்களிலே கண்ணீரின் வெளிப்பாடு அன்பு. நாவினிலே ஆறுதலின் வெளிப்பாடு அன்பு . கைகளிலே கட்டியணைத்தளின் வெளிப்பாடு அன்பு. உதட்டினிலே முத்தத்தின் வெளிப்பாடு அன்பு .
          உடலையும் மனதையும் உயிரையும் புத்தியையும் உலகினை யும் அடக்கி ஆளும் மந்திரமே அன்பெனும் தந்திரம். 
                        நன்றி.     
                                           
                                                        கஷ்மிதா

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விடியல் மங்கை

வாத்தியார்

*🔏வாழ்க்கை பயணம்..*